சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று துன்புறுத்தலுக்குள்ளாகும் பெண்!

Sunday, July 24, 2011

சவுதி றியாத்தில் பணிப்பெண்ணாக 10 மாதங்களாக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மட்டக்களப்பு கன்னன்குடா, பிள்ளையாரடியைச் சோந்த பெ.இராஜேஸ்வரியை (தயா) அவருடைய பாதுகாப்பை உறுதிப்படுத்தி மீட்டுத் தருமாறு பெற்றார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

N4183306 கடவுச்சீட்டு இலக்கத்தை உடைய பெ.இராஜேஸ்வரியை (தயா) கடந்த 2010.09.04 ம் திகதி வீட்டுப் பணிப்பெண்ணாக சவுதி றியாத் சென்றுள்ளார்.
மூன்று மாதமாக வீட்டு எஜமானியால் துன்புறுத்தப்பட்ட இவரது தொடர்பு எதுவும் அற்றிருந்த சிலையில் தற்போது அவருடைய தொடர்பு கிடைத்துள்ளது.
10 மாதமாக சம்பளம் எதுவும் வழங்கப்படாத நிலையில் தனக்கு வீட்டு எஜமானியால் தொடாந்து துன்புறுத்தல் இடம்பெறுவதாகவும், அடிப்பதாகவும், கிள்ளுவதாகவும், அயன் பெட்டியால் சுடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண் பிள்ளைகளின் தாயான இராஜேஸ்வரியின் (தயா)    இரு பிள்ளைகளையும் பராமரிக்க முடியாத நிலையில் தனது தாயிடம் இரு குழந்தைகளையும் ஒப்படைத்து விட்டு பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக சவுதி சென்றுள்ளார்.
 எஜமானியால் இவர் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் இரு பிள்ளைகளும் அவருடைய தாயும் வாழ்க்கையை கடத்த முடியாமல் 10 மாதமாக தவித்து வருவது வேதனைக்குரியதாகவுள்ளது.
தனது பிள்ளைகளைப் பராமரித்து வரும் தாயும் இரு பிள்ளைகளும் துன்புறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இராஜேஸ்வரியின் நிலையினை அறிந்து உணவின்றி அழுது கண்ணீரில் வாடிக்கொண்டிருப்பது வேதனையை அழிப்பதுடன் இவர்களது ஏக்கம் உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.



0096614610004 தொலைபேசி இலக்கத்தை உடைய வீட்டில் இருக்கும் இவருடன் தொடர்பு எடுத்தால் எஜமானி தொலைபேசியை தடுப்பதாகவும், பிள்ளையின் பாதுகாப்பு குறித்து எதுவும் தெரியாதுள்ளதால் இவருடைய நிலை என்ன என்பது தெரியாததால் கவலையாக உள்;ளதாகவும் தெரிவிக்கும் இவருடைய தாய் வள்ளிப்பிள்ளை தனது பிள்ளையை மீட்டுத் தரும்படி கதறி அழுது வேண்டுகோள் விடுக்கின்றார்.
கடந்த 2011.03.23 ம் திகதி இராஜேஸ்வரியின் தந்தை நோ.பெரியதம்பி தனது பிள்ளையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உடனடியாக மீட்டுத் தரும்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் முறைப்பாடு செய்துள்ளார். இவ் முறைப்பாட்டிற்கு பதில் எதுவுமற்ற நிலையில் மீண்டும் 2011.06.16 ம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.
தமது தாயினை பாதுகாப்பாக மீட்டுத் தரும்படியும் இவருடைய இரு பிள்ளைகளும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அரசியல் தலைவர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவரை மீட்க முன்வருவார்களா?