இணையத்தள கொடுக்கல் வாங்கல் குறித்து எச்சரிக்கை!

Sunday, July 31, 2011

சர்வதேச வலையமைப்பு வர்த்தகக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போதும், சர்வதேச வலையமைப்பு வங்கிச் செயற்பாடுகளில் ஈடுபடும் போதும், அதுபற்றி மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று சர்வதேச வலையமைப்பைப் பயன்படுத்துவோருக்கு
குற்ற விசாரணைத் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. சர்வதேச இணையத்தள வலையமைப்பினூடாக நிகழ்த்தப்படும் குற்றங்களில் அதிகரிப்பு காணப்படுகிறது எனவும் எனவே சர்வதேச இணையத்தள வலையமைப்பு ஊடான கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளில் பாதுகாப்பு எச்சரிக்கை செலுத்துவது முக்கியமானது எனவும் மேற்படி திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்தகுலதிலக்க தெரிவித்துள்ளார்.
தற்போது கணினி குற்றவாளிகள் சம்பந்தமாக குற்ற விசாரணைத்திணைக்களம் விரிவான விசாரணைகள் பலவற்றையும் மேற்கொண்டு வருவதாகவும் கணினி மற்றும் சர்வதேச வலையமைப்பு குற்றவாளிகளுக்கு இரையாகும் எந்த ஒருவரும் அதுபற்றி             011242 2176      அல்லது 0112380380 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கமுடியும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.கணினி குற்றமிழைப்புக்கள் சம்பந்தமாக பரிசீலிக்கத்தக்க பரிபூரணமான ஆய்வுகூடம் மற்றும் தற்போது குற்றவிசாரணைகள் திணைக்களத்தின் வசமுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.