இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை : ஐநா அகதிகள் ஸ்தாபனம் Un

Monday, July 5, 2010




  இலங்கையர்களுக்கு இனிமேலும் அகதி அந்தஸ்து வழங்கப்பட மாட்டாது என ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது.

யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகளை எதிர்நோக்குவதாகவும், ஊடகவியலாளர்கள், பெண்கள், சிறுவர் ஆகியோர் இன்னமும் பாரிய அவலங்களைச் சந்திப்பதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் பெண்கள், யுவதிகள் பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்நோக்குவதாகவும் ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. _