நாகரீகத்தின் தொட்டில்கள் என்று கருதப்படும் அமெரிக்காவிலும் நெஞ்சை உலுக்கும் மிருக வதைகள்

Monday, September 19, 2011

மனிதன் நாகரீக வளர்ச்சியில் உச்சத்தை தொட்டுவிட்டான் என்று கூறுகிறோம் ஆனால் நாம் வாழும் உலகில் எம்முடன் வாழும் மிருகங்கள் எந்த கருணையும் இன்றி வைதைக்கப்படுகின்றது.
மிகவும் மோசமாக சித்திர வதைகளை அனுபவிக்கின்றன நாகரிகத்தின் தொட்டில் என்று தம்மை தாமே அழைத்து கொள்ளும் மேற்கு நாடுகளில் கூட்டு மிருக வதைகள் தினமும் இடம்பெறுகின்றது.
மிருகங்கள் மனிதனை போன்று பண்பாட்டை கற்றுகொள்பவை அல்ல. அவை அவற்றுக்குரிய காட்டுப்பண்பாட்டில் வாழ்பவை. தன் குட்டிகளில் மூத்ததை உண்ணும் மிருகங்கள் உண்டு. ஊனமுற்ற குட்டியை கைவிட்டுச்செல்பவை உண்டு. ஒன்றை ஒன்று அடித்து கொல்பவை உண்டு ஆனால் மனிதன் தொடர்ந்தும் நாகரீகத்தை கற்று தெரிந்து விளங்கி உயர்வடைய கூடியவன் .
இதன் மூலம் மனிதன் உருவாக்கிக் கொண்டுள்ள சமூகவாழ்க்கைக்கான நெறிகளே அவன் பண்பாட்டுக் கூறுகளாக மாறியுள்ளன. அன்பு, கருணை, பாசம் ,  சம உரிமை என நாம் சொல்லும் இவை பல வழிமுறைகள் .
நாம் வாழும் உலகில் மிருகங்கள் இறைவனின் ஒரு படைப்பாகவும் இயற்கையின் ஒருபகுதியாக உள்ளது. இவற்றுடன் மனிதர்களான நாம் அன்பாகவும் , பண்பாகவும் ,கவனமாகவும் நடந்து கொள்ளவேண்டும் அவற்றின் உரிமைகளை நாம் வழங்க வேண்டும் ஆனால் உலகின் நாகரீகத்தின் தொட்டில்கள் என்று கருதப்படும் அமெரிக்காவிலும் , மேற்கு நாடுகளிலும் ஒவ்வொரு வினாடியும் கூட்டு மிருக வதைகள் இடம்பெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றது.
மிகவும் அழகாகவும் பாரியதகவும் உயர்வான உற்பத்தி பெறுமானங்களை கொண்டு காணப்படும் அமெரிக்காவின் பண்ணைகளில் மனிதர்கள் வளர்ச்சி அடையாத அநாகரீக மனப்பான்மை கொண்டவர்களாகத்தான் இன்றும் இருகின்றார்கள். இவர்களின் நடவடிக்கைகளில் பலவற்றை அரசும் அங்கீகரித்துள்ளது என்பது பெரும் வேதனை தரும் விடயமாகும்.
கோதுமை போன்ற   உணவு உற்பத்தி அளவுக்கு அதிகமாக இடம்பெற்றால். தனது பண்டத்தின் பெறுமதி உலகில் குறைவடைந்து விடும்  என்ற காரணத்தினால் மேலதிக உற்பத்தியை கடலில் கொட்டும் அமெரிக்கா அல்லது கோதுமையை உற்பத்தி செய்யாமல் இருப்பதற்காக கோதுமை பண்ணை உரிமையாளர்களுக்கு பணம் வழங்கி உற்பத்தி செய்யவேண்டாம் என்று கூறும் அமெரிக்கா
இதனால்   ஆபிரிக்காவில்  சோமாலியா போன்ற நாடுகளில் பல லட்சம்  மனித உயிர்கள் பட்டினியால் கொல்லபடுவதை கூட  சற்றும் கருத்தில் கொள்ளாத அமெரிக்கா ,    மிருகங்களை விடுமா ? யார் நாகரீகம் கொண்டவர்கள் ?.
அது தொடர்பான ஓர் ஆவணத்தை இங்கு பதிவு செய்கின்றோம் .