இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பள விபரங்களை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர்

Saturday, May 28, 2011

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் 2010 ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவு விவரங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.


2010 ஆம் ஆண்டில் 126 விளையாட்டு வீரர்களுடன் இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.

இதில் மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார, முத்தையா முரளிதரன், திலான் சமரவீர, டி.எம்.தில்ஷான், லசித் மாலிங்க ஆகியோருக்கு வருடாந்தக் கொடுப்பனவு 1,20,750 அமெரிக்க டொலர்களாகும்.

நுவான் குலசேகர, சமிந்த வாஸ் ஆகியோருக்கு தலா 71,500 டொலர்கள், ஏன்ஜலோ மத்தியூஸுக்கு 66,150 டொலர்கள், பிரசன்ன ஜயவர்தன, அஜந்த மென்டிஸ்,சாமர கபுகெதர, திலான் துஷார, திலின கண்டம்பி, உபுல் தரங்க, ரங்கன ஹேரத் ஆகியோருக்கு தலா 49,163 டொலர்கள்.

பர்வேஸ் மஹ்ரூப் மற்றும் மலிக்ன வர்ணபுர ஆகியோருக்கு தலா 47250 டொலர்கள், மற்றும் சனத் ஜயசூரியவுக்கு 44000 டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.





இதற்கு மேலதிகமாக தில்ஹார பெர்ணாண்டோ, சானக வலகெதர, தரங்க ரோஹணவிதான ஆகியோருக்கு தலா 33075 டொலர்கள்,
ஜெஹான் முபாரக்கிற்கு 31500 டொலர்கள், அசேல உடவத்த, மலிங்க பண்டார, சாமர சில்வா, தம்மிக பிரசாத், கவுஷால் சில்வா, புஷ்பகுமார ஆகியோருக்கு தலா 21000 டொலர்களும்,

மைக்கல் வெண்டர்ட், ஜிஹான் ரூபசிங்க, ஆகியோருக்கு முறையே 13125 மற்றும் 15750 டொலர்களும், சஞ்சீவ வீரக்கோன், இசுறு உதான, சமிந்த விதான பத்திரன, திணேஷ் தர்ஷனபிரிய, மிலிந்த சிறிவர்தன ஆகியோருக்கு தலா 10, 500 டொலர்களும் வழங்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் அண்மையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் இந்த விவரங்களைத் தாக்கல் செய்தார்.