ஆண்களுக்கு பிடிக்காத விடயங்கள்

Monday, June 6, 2011

பெண்களுக்கு பிடிக்காத சில விடயங்கள் போலவே ஆண்களுக்கும் பிடிக்காத சில விடயங்கள் உள்ளன. அவையாவன; எமோஷனல் பிளாக்மெயில் இயற்கையாகவே அன்பை வாரி வழங்குபவர்கள் பெண்கள். அந்த அன்பை வைத்தே ஆண்களிடம் கொஞ்சி குலாவி தங்களுக்கு என்ன தேவையோ, அதை வாங்கி விடுவார்கள். பெண்களைப் போல ஆண்களும் இயல்பாகவே அவர்களின் அதீத அன்பிற்கு அடிபணிந்து விடுகிறார்கள். அதனால்தான் பெண்கள் அவர்களிடம் உருகி, அன்புமழை பொழிந்து கேட்கும் வார்த்தைகளைத் தட்டமுடிவதில்லை.

`ஓசி'யில் உற்சாகம்
சில பெண்கள் தாங்கள் ஓசியில் உற்சாக பானம் அருந்த, ஆண் நண்பர்களை தங்களுடன் பாருக்கு அழைத்துச் சென்று அவர்களை பலிகடாவாக்கி விடுகிறார்கள். இதுபோன்ற நேரங்களில் என்ன செய்கிறோம், என்ன நடந்தது என்றே தெரியாமல் அப்பாவிகளாக அலைவது ஆண்கள் தான். இப்படி தங்கள் பணம் காலியாவதை ஆண்கள் விரும்புவதில்லை.

செக்சிற்கு மறுத்தல்
பெண்களுக்கு தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்போது அவர்களை வேறுவிதத்தில் பழியைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். கணவர் உணர்ச்சியின் எல்லையில் இருக்கும்போது, மனைவி இது தான் பழி வாங்க நல்ல தருணம் என்று நினைத்து அவருடன் செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்து விடுகிறார்கள்.

வீண்செலவை உண்டாக்குதல் ஆண்களுடன் `டேட்டிங்' என்ற பெயரில் உல்லாசமாக பொழுதைக் கழிக்கும் பெண்கள், அவர்களுக்கு தேவையில்லாமல் செலவை உண்டாக்கி விடுகிறார்கள். ஆண்களும் அப்படி செலவு செய்தால்தான் தன்னைப் பற்றி அவர்கள் பெருமையாக நினைப்பார்கள் என்று தப்புக்கணக்கு போட்டு விடுகிறார்கள்.

அழுகை
பெண்கள் தங்கள் காரியத்தை ஆண்களிடம் சாதிக்க மிகப்பெரிய ஆயுதமாக பயன் படுத்துவது அழுகையை! தங்கள் துணை பயப்படும் விதத்தில் உள்ளக்குமுறலை வெளிப் படுத்திக் கண்ணீரை வரவழைப்பார்கள். அப்படி செய்யும் போது எப்பேர்ப்பட்ட ஆண்களின் கல் மனதையும் பெண்கள் தங்கள் நீலிக்கண்ணீரால் கரைத்து விடுகிறார்கள்.

தொடர்பை துண்டித்தல்
பெண்கள் தங்களது துணையுடன் சண்டைபோட்ட பின்னர் பேசாமல் இருந்து விடு கிறார்கள். அப்போது தொலைபேசியில் கூட பேச விரும்பாமல் இணைப்பைத் துண்டித்து விடுகிறார்கள்.

ஒரு மெயில், ஒரு எஸ்.எம்.எஸ். என்று எதற்குமே பதில் அளிக்காமல் வறட்டு பிடிவாதத்துடன் உம்மென்று இருந்து விடுகிறார்கள். இதனால், பாதிக்கப்படுவது தனது அன்பிற்குரியவர் தான் என்று அவர்களுக்குத் தெரிந்தாலும் அதைக் கண்டு கொள்வதே இல்லை.

கார் டிரைவராக...
ஆடம்பரத்தை விரும்பும் பெண்கள், மற்றவர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை உயர்த்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அதில் ஒரு அங்கமாக, சில நேரங்களில் தங்களது துணையை ஒரு சாதாரண கார் டிரைவரைப் போல வழிநடத்தி, அவர்களை மிகுந்த சங்கடத்திற்குள்ளாக்கி விடுகின்றனர்.

பொடிகார்டாக...
சில சமயம் ஆண்களிடம் பெண்கள் கவர்ச்சியாக பேசி மயக்கி அவர்களை தங்களுக்கு ஒரு பாடிகார்டைப்போல பயன்படுத்திக் கொள்கின்றனர். அவர்கள் விருப்பப்படி நடந்து கொண்டால் தான் நம்மை அவர்கள் விரும்புவார்கள் என்று நினைத்து ஆண்களும் தலையாட்டி பொம்மையாய் பெண்கள் என்ன சொன்னாலும் செய்து விடுகிறார்கள். பின்பு வருந்துகிறார்கள்.