பஸ் கட்டணங்கள் இன்று முதல் 7.6 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்தது. இதன்படி தனியார் மற்றும் இ.போ.ச பஸ் கட்டணங்கள் அதிகரிப்பதோடு ஆரம்ப கட்டணமும் 6 ரூபாவில் இருந்து 7 ரூபாவாக உயர்வதாக ஆணைக்குழு கூறியது.
இதன்படி ஆகக் குறைந்த கட்டணங்களான 6 ரூபா 7 ரூபாவாகவும், 9 ரூபா 10 ரூபாவாகவும் 12 ரூபா 13 ரூபா வாகவும் 15 ரூபா 16 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இது தவிர சொகுசு, அறைச்சொகுசு பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
தேசிய போக்குவரத்து கொள்கையின் பிரகாரம் தனியார் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு இ.போ.ச பஸ் கட்டணங்களும் இதே போன்று உயர்வடைகிறது.
அரைச் சொகுசு கட்டணங்கள் சாதாரண கட்டண உயர்வைவிட 1 1/2 மடங்கினாலும் சொகுசு கட்டணங்கள் 2 மடங்கினாலும் உயர்த்தப்பட் டுள்ளன.
2 வருடங்களின் பின்னரே பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.