பராக் ஒபாமா கொல்லப்பட்டு விட்டார்! செய்தியால் பரபரப்பு

Tuesday, July 5, 2011

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொலை செய்யப்பட்டுள்ளார் என அமெரிக்காவின் 'பொக்ஸ் நியூஸ்' தொலைக்காட்சியின் 'டுவிட்டர்' செய்தி இணைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


டுவிட்டர் இணையத்தளத்தில் 'பொக்ஸ் நியூ'ஸ் தொலைக்காட்சியின் பொக்ஸ் நியூஸ் பொலிட்டிக்ஸ் எனும் செய்தி இணைப்பிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய குழுவொன்றே வதந்தியை செய்தியாக பரப்பியுள்ளது.

பராக் ஒபாமா, இரு தடவை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துவிட்டதாகவும், 4ஆம் திகதி அமெரிக்காவின் சோக தினம் என்றும் அந்த டுவிட்டர் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அமெரிக்காவின் அயோவா மாநிலத்தில் உள்ள ரொஸ் உணவு விடுதில் வைத்து ஜனாதிபதி பராக் ஒபாமா சுட்டுக்கொல்லப்பட்டதாக மேற்படி ட்விட்டர் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், ஜான் பைடன் என்பவர் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை படித்தவர்களில் பலர் அதை உண்மை என்று நம்பி தங்கள் அனுதாபக் கருத்தையும் பதிவு செய்தனர். இன்னும் சிலரோ புதிய அதிபருக்கு வாழ்த்தும் தெரிவித்து எழுதினர்.

ஜூலை 4 அமெரிக்காவின் தேசிய தினம் என்பது குறிப்பிடத்தக்கது. யாரோ சில விஷமிகள் “'பொக்ஸ் நியூ' தொலைக்காட்சியின் டுவிட்டர் இணையப் பக்கத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து ஒபாமா குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ளனர்.

இதனை இஸ்லாமிய பயங்கரவாதிகள் சீன வல்லுனர்களுக்கு காசைக்கொடுத்து செய்திருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது. இதனை அவ்வளவு சுலபமாக விட்டுவிடமுடியாது என எப்.பி.ஐ தெரிவித்துள்ளதோடு, சூத்திரதாரிகளைக் கண்டறியும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே, ஒபாமா பற்றிய தகவலை வெளியிட்டதற்கு பொறுப்பு ஏற்பதாக “த ஸ்கிரிப்ட் கிட்டீஸ்” என்ற இணையதளக் குழுவினர் தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அல் கைதா தலைவர் ஓசாமா பின்லேடன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னர் அதிபர் ஓபாமாவின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவரை இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்நேரமும் தாக்கலாம் என்ற அச்ச சூழ்நிலை காணப்படுகிறது.

இந் நிலையில் அமெரிக்க அதிபர் கொல்லப்பட்டார் என்ற செய்தியை வேண்டுமென்றே கிளப்பிவிட்டார்களா?, இல்லை இது ஒரு எச்சரிக்கையா? என்று தெரியாமல் அமெரிக்க உளவுப் படையினர் மண்டையை பிய்த்துக்கொண்டு உள்ளனராம் !

ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மீது இத்தகைய எந்த தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மையாகும்.
நன்றி;தமிழ்cnn