திருகோணமலை அதிசயச் சிறுமி! முகம் பார்த்து மக்கள் குறை கூறும் 4 வயது சிறுமி! குவியும் மக்கள்

Saturday, July 16, 2011

திருகோணமலை மாவடத்தின் துவரங்காடுப் பகுதியில் நான்கு வயது சிறுமி ஒருவர் அதிசயமான முறையில் மக்களின் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருகின்றார்.

குடும்பத்தில் நிலவுகின்ற பிரச்சனை, கல்வி அபிவிருத்தி மற்றும் ஏனைய விடயங்களையும் எவ்வித பணமுமின்றி பாதிக்கப்பட்டவர்களின் முகத்தை பார்த்த வண்ணம் உண்மைகளை கூறுகின்ற காட்சியினை காணக்கூடியதாக இருக்கின்றது.

குறித்த சிறுமியைக் காண ஏராளமான மக்கள் அவரது வீட்டில் கூடுகின்றனர்.

எமது செய்திப்பிரிவினர் குறித்த வீட்டுக்குச் சென்ற போது சிறுமி மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இயல்பான குழந்தைத்தனத்துடனும் குறும்புத்தனமாகவும் காணப்பட்டார்.

வீட்டுக்கு வெளியே கேற்றடியில் அறிவிப்பு பலகை ஒன்று தொங்கியது.

அதில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்கு இச்சிறுமியின் அபூர்வமான கருத்தை கேட்க விரும்புவோருக்கு இலக்கத்துண்டுகள் வழங்கப்பட்டு சனிக்கிழமை தெய்வீகத்தன்மை மிக்க நான்கு வயது சிறுமியை பார்க்க முடியும்.



திருகோணமலை துவரங்காடு பகுதியைச் சேர்ந்த சிவஞானம் - கவிதா தம்பதிகளின் நான்கு வயது மகளான துர்கா என்பவரே இப்படி ஆச்சரியமான செய்கைகளால் பார்ப்போரை வியக்க வைக்கிறார்.

நான்கு வயதேயான பேசவே முடியாத சிறுமிக்கு சாத்திரகாரர்களால் எதிர்ப்புக்கள் அதிகமாக வருவதாக தாய் கவலை தெரிவிக்கின்றார்.

இதுவரை காலமும் தொழிலாக செய்த சூனியக்கார்களே பார்வையிட வருபவர்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்குகினறனர்.

அதனை உட்கொள்ள வேண்டாம் எனவும் சிறுமியின் தாயார் கூறுகின்றார்.