செக்ஸ் வாழ்க்கைக்கு பலம் கூட்டவும், வலுவூட்டவும் ஏகப்பட்ட மருந்துகள், உபாயங்கள் உள்ளன. இந்த வழியில், வெந்தயத்திற்கு, செக்ஸ்
உணர்வுகளை அதிகரிக்கும் மற்றும் செக்ஸ் உறவுகளை வலுவூட்டக் கூடிய சக்தி இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை இது தூண்டுவிக்க உதவுகிறதாம்.
வெந்தயம், உணவு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. வெந்தயத்தை வைத்து ஏகப்பட்ட உணவுப் பயன்பாட்டை மக்கள் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் இந்த வெந்தயத்திற்கு செக்ஸ் வாழ்க்கையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் வல்லமை உள்ளதாம்.
வெந்தயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு, செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கிறதாம். இந்த ஆய்வுக்காக 25 வயது முதல் 52 வயது வரையிலான 60 ஆரோக்கியமான ஆண்களை ஆய்வுக்குட்படுத்தினர். அவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 முறை என மொத்தம் 6 வாரங்களுக்கு வெந்தயச் சாறு கொடுத்துப் பார்த்தனர்.
ஆய்வுக்காலத்தின்போது அவர்களது செக்ஸ் உணர்வுகள் கண்காணிக்கப்பட்டன. ஆறு வார காலத்திற்குப் பின்னர் அவர்களது செக்ஸ் உணர்வுகள் 16.1 என்பதிலிருந்து 20.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.
அதேசமயம், வெந்தயம் சாப்பிடாமல் ஒரு குழுவினரை ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர்களுக்கு செக்ஸ் உணர்வுகள் மந்தமாக இருந்தது தெரிய வந்தது.
வெந்தயச் செடியின் விதைகளில் சபோனின் எனப்படும் ஒரு கூட்டுப் பொருள் உள்ளது. அது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானை தூண்டுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாதாரணமாக உபயோகப்படுத்தப்படும் வெந்தயத்திற்கு ஆண்களின் செக்ஸ் ஹார்மோனை தூண்டும் சக்தி அதிகம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆண்களுக்கு சந்தோஷமான செய்திதான்.
படுக்கை அறையில் இனி முழுமையான உணர்வுகளுடன், சந்தோஷமாக இருக்க, இனி அடுக்களைப் பக்கமும் போங்கள் ஆண்களே...!
Archives
-
▼
2011
(89)
-
▼
July
(10)
- இணையத்தள கொடுக்கல் வாங்கல் குறித்து எச்சரிக்கை!
- பொன் முட்டை இடும் பணிப்பெண்கள்!
- சவுதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்று துன்புறுத்...
- வீதிகளில் ‘செக்ஸ் பெட்டிகள்’: சுவிஸ் அரசு!
- உடற்பயிற்சி வாழ்வில் முக்கியமான ஒன்று
- தீயில் எரிந்தன 17 ,000 பாஸ்போர்ட்டுகள்
- திருகோணமலை அதிசயச் சிறுமி! முகம் பார்த்து மக்கள் ...
- இஸ்லாத்தை நோக்கி இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ?
- செக்ஸ் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் வெந்தயம்!
- பராக் ஒபாமா கொல்லப்பட்டு விட்டார்! செய்தியால் பரபர...
-
▼
July
(10)
செக்ஸ் வாழ்க்கைக்கு கை கொடுக்கும் வெந்தயம்!
Friday, July 8, 2011இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 5:00 PM
லேபிள்கள்: health, nwes, world news, மகளிர் பககம்