Archives
-
▼
2010
(18)
-
►
September
(16)
- புதிய வைரஸ் எச்சரிக்கை
- தலைகீழான வீடு - படங்கள் இணைப்பு!
- 100 கோடி பக்கங்கள்…
- பழைய உணவு விஷமாகும்
- பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?
- மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்!
- எய்ட்ஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழம்
- இனிப்பான தேனுக்கு அடியில் கசப்பான உண்மை!
- கர்ப்பிணிகள் பப்பாளி உண்ணலாமா?
- பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?
- தோல்விகளின் பின்னர் வெற்றி!
- ...
- கணவனைக் காட்டிலும், மனைவிக்கு!!
- பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரி...
- குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
- அபிவிருத்திப் பாதையில் இலங்கை சுற்றுலாத்துறை எதிர்...
-
►
September
(16)
நாடு கடந்த தமிழீழ அரசுக்குள் குத்துவெட்டு!
Monday, October 4, 2010புதிய வைரஸ் எச்சரிக்கை
Thursday, September 23, 2010தலைகீழான வீடு - படங்கள் இணைப்பு!
100 கோடி பக்கங்கள்…
4
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 11:29 AM
பழைய உணவு விஷமாகும்
Tuesday, September 21, 2010இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 5:21 AM
பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?
கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா? அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம். 1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு. 2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது. 3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு. 4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள். 5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் பைல்களை அழித்துவிடும். |
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 5:17 AM
மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்!
நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்டர்நெட் பயன்படுத்துவதால் சாதகமான மருத்துவ பயன் ஏற்படுவதாக கூறும் ஆராய்ச்சி வெளிவந்துள்ளது.டீன்ஏஜ் மனஅழுத்த நோயாளிகள், இன்டர்நெட் பார்ப்பதால் குணமாகலாம் என்று ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். ‘இன்டர்நெட் செல்ப் ஹெல்ப் பார் டெப்ரஷன்’ என்ற தலைப்பில் சிட்னி பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய பேராசிரியர் சுவனா சேத்தி ஆய்வு நடத்தினார். மனஅழுத்தம் கொண்ட டீன்ஏஜ் வயதினரை தேர்வு செய்து, இன்டர்நெட்டில் மனநலம் குறித்த தகவல் பரிமாற்ற இணைய தளங்களை பார்த்து வர செய்தார். இணைய தளங்களில் மனஅழுத்தத்துக்கு மருத்துவ நிபுணர்களின் கலந்துரையாடல், சிகிச்சை ஆலோசனைகள் பெற்ற டீன்ஏஜ் வயதினர், பாரம்பரிய சிகிச்சை பெற்றவர்களைவிட வேகமாக குணமானது தெரிய வந்தது. டாக்டரிடம் நேரில் மனஅழுத்த பாதிப்புகளை விளக்குவதை விட ஆன்லைன் ஆலோசனை தளங்களில் பதிவு செய்வது துல்லியமாக இருப்பதால், நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனைகளால் மனஅழுத்தம் வேகமாக குறைகிறது. டாக்டர்களில் நேரில் ஆலோசனை பெறச் செல்லும் இளைஞர்கள் பல விஷயங்களை தெரிவிக்க மறந்து விடுகின்றனர். இதனால், சிகிச்சை சரியாக அமையாமல் பிரச்னை நீடிக்கிறது என்கிறார் டாக்டர் சுவனா சேத்தி. |
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 5:05 AM
எய்ட்ஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழம்
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:50 AM
இனிப்பான தேனுக்கு அடியில் கசப்பான உண்மை!
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:46 AM
கர்ப்பிணிகள் பப்பாளி உண்ணலாமா?
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:39 AM
பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:36 AM
தோல்விகளின் பின்னர் வெற்றி!
நம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்துக் செயற்பாடுகளிலும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புவது இயல்பு. அடுத்தடுத்து தடைகள், தோல்வி கள் ஏற்படும் போது வெறுப்பு ஏற்படுவதும் இயல்பு. அவ்வாறு நிகழும் போதெல்லாம் நான் படித்த சில வெற்றியாளர்களின் தோல்விகளை எண்ணிப்பார்ப்பதுண்டு.
கணிணி மூலம் 21ம் நூற்றாண்டில் உலக மக்களின் அன்றாட வாழ்வினையே மாற்றியமைத்த பெருமை, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட் ஸைச் சேரும். 10 வருடங்களுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர். 1970ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியேற்பட்டது.பாடசாலையில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை தோல்வியடைந்தவர். இருப்பினும் மனம் தளராது முயன்று, வென்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியானார்.ஐசாக் நியூட்டன் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கணித மேதைகளுள் ஒருவர். ஒலியியல் மற்றும் புவியீர்ப்பு விதிகள் அவரை தலை சிறந்த விஞ்ஞானியாகப் போற்ற காரணமா னவை. அவர் பாடசாலையில் படிக்கும்போது மிக மோசமாக படிக்கும் மாணவருள் ஒருவர். ஆசிரியர்கள் அவரைப் படிக்க வைக்க பல வகைகளில் முயன்றும் அவை தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட வாழ்விற்குத் தேவையான பல கருவிகளை நமக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் தோமஸ் அல்வா எடிசன். சரித்திரம் போற்றும் விஞ்ஞானியான இவர் பெயரில் 1093 அமெரிக்க கண்டுபிடிப்பு உரிமம் (Patent) உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது. ஆனால் சிறு வயதில் இவருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் ‘உன்னால் எதுவுமே கற்க முடியாது’ என்று கூறியிருக் கிறார்.
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:02 AM
கணவனைக் காட்டிலும், மனைவிக்கு!!
Monday, September 20, 2010பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
Wednesday, September 15, 2010இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 9:14 PM
குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
அபிவிருத்திப் பாதையில் இலங்கை சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள்
Tuesday, September 7, 2010 இலங்கை நாடானது சுற்றுலாத்துறைக்கு சிறந்த ஓர் இடமாகவும் உல்லாசப்பயணிகள் விரும்பி வரும் நாடாகவும் உள்ளது. கடந்த காலங்களில் நிலவிய போர்ச்சூழலிலும் யுத்தம் இடம்பெறாத ஏனைய இடங்களுக்கு வந்து போவதை உல்லாசப்பயணிகள் விரும்பியிருந்ததை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்தோம்.
எனினும் உல்லாசப்பயணிகள் அதிகம் விரும்பும் கரையோரப்பிரதேசங்களில் அவர்களுக்கு ஏற்ற சூழல் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே. குறிப்பாக பெருநகரங்களை அண்டிய கரையோரப்பகுதி ஹோட்டல்கள் அதற்கேற்ற சூழலில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி கவனிக்க வேண்டியுள்ளது.
தமது விடுமுறை காலத்தை அமைதியாகவும் இரம்மியமான இடத்தில் கழிக்கவுமே உல்லாசப்பயணிகள் விரும்புவர். ஒரு சில கரையோரப்பிரதேச ஹோட்டல்கள் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்தாலும் வாகன இரைச்சல், அசுத்தமான சூழல், பிரதேசத்தை அண்டிய பகுதி மக்கள் சிறுவர்களின் தொல்லைகள், சிறு வியாபாரிகளின் அத்துமீறல்,போதை பொருள் பாவனையாளர்கள், திருடர்கள் என பல இன்னல்களுக்கு உல்லாசப்பயணிகள் முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
இவற்றை எப்படி தவிர்ப்பது என்பது பற்றிய ஆய்வுகள் அவசியம். உல்லாசப்பயணத்துறையை ஊக்குவிக்க அரசாங்கம் எந்தளவிற்கு முயற்சிகள் எடுத்து வருகின்றதோ அதே போல் அதை பாதுகாக்கவும் தூரநோக்கு செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறான சூழலில் நாம் உல்லாசப்பயணிகள் அதிகம் வருகை தரும் கடற்கரை பகுதியான ஹிக்கடுவைக்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தது. “சுற்றுலாப் பருவமான கடந்த நவம்பர் மாதம் முதல் இவ்வருடத்தின் ஏப்பிரல் வரையான காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகை 35 சதவீதத்தால் அதிகரித்துள்ளது . அதுமாத்திரமல்ல இலங்கையை உலகிலுள்ள பாதுகாப்பான மற்றும் பிரபல்யமிக்க சுற்றுலா கேந்திரஸ்தலமாக டைம்ஸ் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. என்கின்றார் ஹிக்கடுவை கொரல் சாண்ட் ஹோட்டல் தலைவரும் ஹிக்கடுவை சுற்றுலா ஹோட்டல் சங்கத்தின் உப தலைவருமான சுமேத குலதுங்க.
கடந்த காலங்களில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை மற்றும் சுனாமி அனர்த்தத்தினாலும் பின்னடைவை சந்தித்திருந்த இலங்கையின் சுற்றுலாத்துறையானது தற்போது படிப்படியாக வளர்ச்சி கண்டு வருகின்றமைக்கு இது நல்லதொரு சான்று.
இலங்கையின் தென் பகுதியிலுள்ள சுற்றுலாத்தளங்களாக மாத்தறை,ஹிக்கடுவை,மிரிச,அம்பாந்தோட்டை பெரிதும் பிரபல்யம் பெற்றவை. இயற்கையின் வனப்பு கொட்டிக்கிடக்கும் இந்த இடங்களின் அழகை ரசிப்பதற்காக வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றதாக இங்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டிருப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் சுற்றுலாசபையால் அனுமதிக்கப்பட்ட ஹோட்டல்களிலுள்ள மொத்த அறைகள் 14ஆயிரம் ஆகும். இதுவரை 6 இலட்சம் சுற்றுலாபயணிகள் இந்த அறைகளை பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிக்கடுவையில் மாத்திரம் 1000 அறைகள் உள்ளதாக கூறப்படுகின்றது .ஆனால் அவற்றில் 200 அறைகள் மாத்திரமே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளதாக ஹிக்கடுவையிலுள்ள சுற்றுலா ஹோட்டல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஹிக்கடுவையிலுள்ள 60 சதவீதமான மக்கள் சுற்றுலாத்துறைச்சார் தொழில்களில் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இவர்கள் ஹோட்டல்கள், விடுதி,கடைகள் மூலம் வருமானம் ஈட்டுவதோடு சுற்றுலாவழிகாட்டி, படகோட்டி,டெக்ஸி,முச்சக்கரவண்டிகள் சாரதிகள் என பல்வேறு தொழில்களில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர்.
அதிகளவு சுற்றுலாபயணிகள் வரும் நாடுகள்
டென்மார்க்,சுவீடன்,நோர்வே, இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே அதிகமாக ஹிக்கடுவைக்கு சுற்றுலாவை மேற்கொள்கின்றனர். அதேபோல் ஜேர்மன், பிரான்ஸ்,ரஷ்யா நாட்டவர்களும் தென் பகுதிக்கு அதிகளவில் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஹிக்கடுவை ஹோட்டல்களிலுள்ள 70 அறைகளும் அடுத்த பருவக்காலத்துக்காக ஏற்கனவே முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் ஹோட்டல் துறையினர் அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் இலங்கையிலுள்ள ஹோட்டல்கள் சுற்றுலாபயணிகளுக்கு போதியதாக இருக்காது எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுலாபயணிகளை அதிகரிக்க அரசு திட்டம்
இதேவேளை 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய சுற்றுலாத்துறையை மேலும் அபிவிருத்தி செய்வது தொடர்பில் அரசு அடுத்த வருடம் விசிட் ஸ்ரீலங்கா என்ற நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அதேபோல் அடுத்த மாதம் இந்திய திரைப்படவிருது வழங்கல் விழா இங்கு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அதிகளவான சுற்றுலாபயணிகள் வருவார்கள் என நம்பபடுகின்றது. அதேபோல் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை இங்கு நடத்துவதன் மூலம் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
சுற்றுலாத்துறையில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
இலங்கை சுற்றுலாச்சபைக்கான தலைவரோ அல்லது செயலாளரோ இதுவரை நியமிக்கப்படாமையால் ஹோட்டல் துறையினர் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சுமேத குலதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
சுற்றுலாத்துறை தொடர்பில் நல்ல முன்னேற்றத்தை கண்டு வரும் போது அதற்கேற்ப பிரச்சினைகளும் தலைதூக்கத் தான் செய்கின்றன. சுற்றுலாத்துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு விசேட மின்சார கட்டணமொன்றை அறவிடுவதற்கான நடவடிக்கையை மின்வலு எரிசக்தி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது. இது எம்மை மேலும் பாதிக்கும் செயலாக அமைகின்றது.
சுற்றுலாபயணிகள் எதிர்நோக்கும் சிரமங்கள்
ஹிக்கடுவைக்கு சுற்றுலாப்பயணிகள் வரவிரும்பாமைக்கான காரணம் அங்குள்ள ஹோட்டல்கள் பாதையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளமையே ஆகும். வாகனங்களில் இரைச்சல் சத்தம் அதிகம் .அதனால் அவர்கள் அமைதியாக பொழுதைப்போக்குவதற்கான சூழல் அங்கு இல்லை என ஹிக்கடுவை சுழியோட்டி பாடசாலை அதிபர் சோமதாஸ தெரிவித்தார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்:- இந்த கடற்கரையில் பவளப்பாறைகள் மீன்கள் மற்றும் கடல்ஆமைகளை அதிகமாக இருக்கின்றன .சுற்றுலாபயணிகள் இதனை பெரிதும் ரசித்து மகிழ்கின்றனர. இந்த அழகில் சுற்றுலாபயணிகள் மெய்மறந்து இருக்கும் போது படகோட்டிகள் அந்த மக்களை முட்டிமோதிச் செல்கின்றனர்.இதனால் இவர்கள் காயத்துக்குள்ளான சந்தர்ப்பங்களும் உள்ளன. கடலுக்குள் இறங்கினால் படகில்; முட்டிமோத வேண்டியுள்ளது.வீதிக்கு சென்றால் வாகனத்தில் முட்டிமோத வேண்டியுள்ளது என சுற்றுலாபயணிகள் தெரிவிக்கின்றனர். ஹோட்டல் துறையினரின் எதிர்பார்ப்புகள்
அதிக வருமானத்தை ஈட்டித்தரக்கூடிய துறையிது.இதனை அபிவிருத்தி செய்வதற்கு அரசு உதவும் பட்சத்தில் சுற்றுலாபயணிகளின் வருகையை அதிகரிக்க கூடியதாக இருக்கும் என தெரிவிக்கும் மிரிச பாம் ரெஸ்ட் ஹோட்டல் உரிமையாளர் எட்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
இந்த இலக்கை அடைந்துக் கொள்வதற்கு ஹோட்டல் துறையினருக்கு கடன்வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன் பொருட்களை இறக்குமதி செய்வதில் வரிசலுகைகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதேபோல் இந்த துறையில் ஈபடுவோருக்கு பயிற்சிகளை வழங்க வேண்டும்.சர்வதேச தரத்துக்கேற்ப பயிற்சிகள் வழங்குவதன் மூலம் சுற்றுலாபயணிகளுக்கு சிறந்த சேவையை பெற்றுக்கொடுக்க கூடியதாக இருக்கும்.
இதேவேளை மிரிச கடற்பரப்பில் அதிகளவான திமிங்கிலமும் டொல்பின்களும் உள்ளன.இவற்றை முறையாக பாதுகாப்பதன் மூலம் சுற்றுலா பயணிகளிடமிருந்து அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். ஆகவே இதனை பாதுகாப்பதற்கான உதவிகளை அரசு வழங்க வேண்டும்.
அதேவேளை எமது நாட்டு சிற்பிகளின் கை வண்ணத்தால் உருவாக்கப்படும் சிற்பங்களை சுற்றுலாபயணிகள் விரும்பி வாங்குகின்றனர். ஹிக்கடுவையில், நிமால் வுட்காவிங் சென்டர் உரிமையாளர் நிமால் பாரம்பரிய சிற்பகலையை மேற்கொண்டு வருகின்றார். முகமூடி,யாணை மற்றும் கிருஷ்ணரின் சிலைகளை வாங்குவதற்கு சுற்றுலாபயணிகள் ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கும் இவர்.இலங்கை மரக்கூட்டுத்தாபனத்தால் காலதாமதமின்றி பலகைகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் தனது வியாபாரத்தை தடையின்றி முன்னெடுக்கலாம் என சுட்டிக்காட்டினார்.
அந்நியச்செலாவணியை அதிகளவில் பெற்றுக்கொடுப்பதில் சுற்றுலாத்துறை பாரிய பங்களிப்பை செய்கின்றது. ஆகவே இத்துறையுடன் தொடர்புபட்டவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுத்து. சுற்றுலாத்துறை மேம்படுத்தல் நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொள்வதன் மூலம் 2014 ஆம் ஆண்டு 2மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான இலக்கை அடையக்கூடியதாக இருக்கும்.
-நிரஞ்சனி ரோலண்ட்- .
இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 9:15 AM
லேபிள்கள்: Virakesari
இலங்கையருக்கு அகதி அந்தஸ்து இனி இல்லை : ஐநா அகதிகள் ஸ்தாபனம் Un
Monday, July 5, 2010இலங்கையில் யுத்தம் முடிவடைந்து தற்பொழுது அமைதி சூழ்நிலை நிலவுவதன் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஏப்ரல் மாதம் அகதிகள் அந்தஸ்து கோரிக்கையை அவுஸ்திரேலியாவும் நிராகத்திருந்தது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த போதிலும் பெரும்பாலானோர் இன்னமும் ஆபத்தான சூழ்நிலையில் வாழ்வதாகவும் அந்த ஸ்தாபனம் சுட்டிக் காட்டுகின்றது. யுத்தம் முடிவடைந்துள்ள போதிலும், குறிப்பிட்ட சில மக்கள் இனப்பாகுபாடு காரணமாக இடையூறுகளை எதிர்நோக்குவதாகவும், ஊடகவியலாளர்கள், பெண்கள், சிறுவர் ஆகியோர் இன்னமும் பாரிய அவலங்களைச் சந்திப்பதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களில் வாழும் பெண்கள், யுவதிகள் பாலியல் ரீதியான வன்முறைகளை எதிர்நோக்குவதாகவும் ஐநாவுக்கான அகதிகள் ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளது. _ |