நம் அன்றாட வாழ்வில் செய்யும் அனைத்துக் செயற்பாடுகளிலும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புவது இயல்பு. அடுத்தடுத்து தடைகள், தோல்வி கள் ஏற்படும் போது வெறுப்பு ஏற்படுவதும் இயல்பு. அவ்வாறு நிகழும் போதெல்லாம் நான் படித்த சில வெற்றியாளர்களின் தோல்விகளை எண்ணிப்பார்ப்பதுண்டு.
கணிணி மூலம் 21ம் நூற்றாண்டில் உலக மக்களின் அன்றாட வாழ்வினையே மாற்றியமைத்த பெருமை, மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் அதிபர் பில்கேட் ஸைச் சேரும். 10 வருடங்களுக்கும் மேலாக உலகின் மிகப்பெரிய பணக்காரராக திகழ்பவர். 1970ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் படிப்பை பாதியில் நிறுத்த வேண்டியேற்பட்டது.பாடசாலையில் 5ஆம் வகுப்பு வரை கூட பயிலாதவர் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன். பிற்காலத்தில் அரசியலில் வெவ்வேறு தேர்தல்களில், வெவ்வேறு பதவிகளுக்கு 12 முறை தோல்வியடைந்தவர். இருப்பினும் மனம் தளராது முயன்று, வென்று அமெரிக்காவின் 16வது ஜனாதிபதியானார்.ஐசாக் நியூட்டன் அக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகச் சிறந்த கணித மேதைகளுள் ஒருவர். ஒலியியல் மற்றும் புவியீர்ப்பு விதிகள் அவரை தலை சிறந்த விஞ்ஞானியாகப் போற்ற காரணமா னவை. அவர் பாடசாலையில் படிக்கும்போது மிக மோசமாக படிக்கும் மாணவருள் ஒருவர். ஆசிரியர்கள் அவரைப் படிக்க வைக்க பல வகைகளில் முயன்றும் அவை தோல்வியிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அன்றாட வாழ்விற்குத் தேவையான பல கருவிகளை நமக்குக் கண்டுபிடித்துத் தந்தவர் தோமஸ் அல்வா எடிசன். சரித்திரம் போற்றும் விஞ்ஞானியான இவர் பெயரில் 1093 அமெரிக்க கண்டுபிடிப்பு உரிமம் (Patent) உள்ளது என்றால் வியப்பாக இருக்கிறது. ஆனால் சிறு வயதில் இவருக்கு பாடம் கற்பித்த ஆசிரியர் ‘உன்னால் எதுவுமே கற்க முடியாது’ என்று கூறியிருக் கிறார்.
Archives
-
▼
2010
(18)
-
▼
September
(16)
- புதிய வைரஸ் எச்சரிக்கை
- தலைகீழான வீடு - படங்கள் இணைப்பு!
- 100 கோடி பக்கங்கள்…
- பழைய உணவு விஷமாகும்
- பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?
- மனஅழுத்தத்தை குறைக்கும் இன்டர்நெட்!
- எய்ட்ஸ் நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழம்
- இனிப்பான தேனுக்கு அடியில் கசப்பான உண்மை!
- கர்ப்பிணிகள் பப்பாளி உண்ணலாமா?
- பெண்கள் ஏன் அதிகம் செலவழிக்கிறார்கள் தெரியுமா?
- தோல்விகளின் பின்னர் வெற்றி!
- ...
- கணவனைக் காட்டிலும், மனைவிக்கு!!
- பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரி...
- குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
- அபிவிருத்திப் பாதையில் இலங்கை சுற்றுலாத்துறை எதிர்...
-
▼
September
(16)
தோல்விகளின் பின்னர் வெற்றி!
Tuesday, September 21, 2010இடுகையிட்டது Balapiti Aroos நேரம் 4:02 AM