பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Wednesday, September 15, 2010


சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் வீட்டில் கொள்ளை சமபவங்கள் நிகழ வாய்ப்புக்கள் உள்ளது என எச்சரித்துள்ளனர் போலீசார். சமீபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் தான் ஊருக்கு போக இருப்பதை பேஸ்புக்கில் தெரிவித்திருந்திருக்கிறார்.

இதை கண்காணித்துக் கொண்டே இருந்த கொள்ளை கும்பல் சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாத போது அவர் வீட்டிற்குள் புகுந்து திருடியுள்ளனர். இது போன்ற திருட்டு வேலைகளுக்காகவே பீட்டர் ட்ரோவேர் , 22 , ஜோசப் மேச்லேன்னன் , 18, ஆகிய இருவர் சரியான சந்தர்ப்பத்திற்காகவே பல பெஸ்பூக் கணக்குகளை நோட்டம் விட்டு வந்துள்ளளனர்.

அந்த நேரத்தில் கேம்பிரிட்ஜ் ஷிரில் ஒரு குடும்பத்த்தை சேர்ந்தவர்கள் தாங்கள் வெளியூர் போவதை அறிவித்தது திருடர்களுக்கு வசதியாகப் போய் விட்டது. பெச்பூகில் இருக்கும் முகவரியை வைத்து வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கணினி, பர்ஸ், நகைகள், டிவிடி ஆகியவற்றை கொள்ளையடித்துச் செல்ல முற்பட்டனர்.

அண்டை வீட்டுக்காரர்கள் இதை கவனித்து போலீசில் புகார் அளித்ததால் மிகப்பெரிய கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களை எந்த அளவில் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பலமுறை கட்டுரைகளில் கூறிய பின்னரும் நட்பு என்ற பெயரில் தங்கள் சொந்த தகவல்கள் அனைத்தையும் சமூக வலைகளில் கொடுக்கும் பழக்கம் மக்களிடம் இருக்கிறது.

இது குறித்த விரிவான கட்டுரையை தமிழ் சி.என்.என் வாசகர்களின் நலனை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்னர் தொழில்நுட்ப பகுதியிலும் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.