ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற நாய் : ஜெர்மனியில் நடந்த வினோதம்

Thursday, January 13, 2011

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ராமோனா என்பவர் வளர்த்துவரும் நாய் ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றுள்ளது பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.ஜெர்மனியின் பெர்லின்
நகரில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள நோயென் என்ற பகுதியில் வசித்து வரும் ராமோனா வேக்மன் என்பவர் ஆப்ரிக்க நாட்டின் வேட்டை நாய் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.
இந்த நாய் அண்மையில், ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றது. இதனால் அதன் உரிமையாளரான வேக்மன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அனைத்து நாய் குட்டிகளுக்கும் ஆங்கில "பி' எழுத்தில் தொடங்கும் ஆப்ரிக்க பெயர்களை சூட்டியுள்ளார். எனினும், தனது வளர்ப்பு பிராணி ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்றது தொடர்பான மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. காரணம், வேக்மனுக்கு அந்த நாய்குட்டிகளையும் பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த 17 குட்டிகளுக்கும் தேவையான பால், தாய் நாயிடம் இல்லை. தாயிடம் பால் குடிப்பதில் குட்டிகளும் பலத்த போட்டிபோட்டு சண்டையிட்டுக் கொள்ளும். இதனால் வேக்மன் குட்டிகளுக்கு புட்டிப்பால் கொடுத்தார். அதிலும் சிக்கல் எழுந்தது. புட்டி பாலை ஒவ்வொரு குட்டியாக புகட்டிவிட்டு, கடைசி குட்டிக்கு வரும் போது முதல் குட்டிக்கு மீண்டும் பசிக்கத் தொடங்கிவிடும். திரும்பவும் முதல் குட்டியிலிருந்து பால் புகட்ட வேண்டும்.அனைத்து நாய் குட்டிகளையும் பராமரிப்பதில் பெரும் சிக்கல் எழுந்ததால், வேக்மன் பெரும்பாலான குட்டிகளை விற்பனை செய்து விட முடிவு செய்துள்ளார். ஒரு நாய்க்குட்டியின் விலை 60 ஆயிரம் ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்துள்ளார்.