ஆறறிவு உடைய மனிதனைக் காட்டிலும் ஐந்து அறிவு உடைய ஜீவராசிகள்

Friday, January 21, 2011

மனிதன் இன்று மிருகமாக மாறிக் கொண்டு இருக்கின்றான். ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்கின்றமை மானிட இயல்பாக மேலோங்கிக் காணப்படுகின்றது.
உண்மையான அன்பு, விசுவாசமான நட்பு ஆகியன மனித குலத்தின் மத்தியில் மலையேறிக் கொண்டு செல்கின்றன.

சுய நலம், பிரிவினை ஆகியன மனிதனை ஆட்டிப் படைக்கின்றன.

ஆறறிவு என்பது அழிவுக்கு காரணம் ஆகி கொண்டு இருக்கின்றது.

ஆனால் ஆறறிவு உடைய மனிதனைக் காட்டிலும் ஐந்து அறிவு உடைய ஜீவராசிகள் அகிம்சை, காருண்யம் ஆகியவற்றை வெளிப்படுத்தி வருகின்றமையை கண்கூடாக காண முடிகின்றது.

இந்த ஜீவராசிகளில் பல இயற்கையின் படைப்பில் எதிரிகளாக இருக்கின்றன என்பது மிகவும் அதிசயிக்கத் தக்க விடயமாக உள்ளது.