வீடின்றி தெருவில் தவித்துக் கொண்டிருந்த பிச்சைக்காரன் கோடீஸ்வரனான உண்மைச் சம்பவம் -

Thursday, January 13, 2011

டெட் வில்லியம்ஸ் - கொலம்பஸ், ஓஹியோ பகுதிகளில் கையில் சிறிதும் காசின்றி தெருக்களில் பிச்சை எடுத்து வாழ்ந்து வருபவர். மதுப் பழக்கத்திற்கும் அடிமையானவர். ஆனால் இவரிடம் உள்ள விலை மதிக்க முடியாத சொத்து இவரின் குரல்.

முன்பு வானொலி அறிவிப்பாளராக
பணியாற்றிய இவர் பிச்சையெடுத்து வாழக் கூடாது எனக் கருதி திடிரென புதிய யுக்தி ஒன்றை கையாண்டுள்ளார்

 தான் வானொலி அறிவிப்பாளராக பணியாற்றியுள்ளதையும் கடவுள் கொடுத்த மிகச் சிறந்த சொத்தான குரல் தன்னிடம் இருப்பதையும் ஒரு சிறிய அட்டையில் எழுதி வைத்து மக்கள் கூடும் பகுதிகளுக்கு தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார் வில்லியம்ஸ்.

தனக்கு வேலை கொடுத்து உதவுபவர்களுக்கு கடமைப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவித்துள்ளார். இதைக் கண்ட நாளிதழ் ஒன்று அவரிடம் பேட்டி எடுத்து அதனையும் வெளியிட்டுள்ளனர். பேட்டியில் வில்லியம்ஸ் தொகுத்து வழங்கிய சில நிகழ்ச்சிகளும் வெளியிடப்பட்ட பின் பல நிறுவனங்கள் அவருக்கு போட்டி போட்டுக் கொண்டு வாய்ப்பளிக்க முன் வந்துள்ளன.

 .தற்போது மதுபானங்கள் குடிப்பதை குறைத்துக் கொண்டு சிறப்பாக பணியாற்றி கோடிகளை குவித்து வருகிறார் வில்லியம்ஸ். பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களும் தற்போது தங்கள் நிறுவனத்தில் பணியாற்றுமாறு வில்லியம்ஸிடம் கேட்டு வருகின்றன.