வடக்கில் 30 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு நியமனக்கடிதங்கள்

Friday, January 21, 2011

சிறந்த முறையில் முழுமையாக புனர்வாழ்வு பெற்று, தொழிற்பயிற்சியை நிறைவேற்றிக்கொண்ட 30 முன்னாள் விடுதலைப்புலி
உறுப்பினர்கள், இலங்கை போக்குவரத்து சபையால் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைதீவு மற்றும் கிளிநொச்சி மாவட்ட டிபோக்களில் சேவையாற்ற நியமனம் பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் பாராளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

மேலும் சில முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். கொன்டாவில் டிபோவின் சாரதிகளாக சேவையாற்றும் பொருட்டு இணைக்கப்பட்டுள்ளனர். இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தாம் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு சிறந்த முறையில் புனர்வாழ்வு அளித்தது மட்டுமின்றி சமுகத்துடன் இணைந்து வாழும் பொருட்டு தகுந்த தொழில் பயி்ற்சிகளும் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.

வடபகுதிக்கான போக்குவரத்து அபிவிருத்திக்கு பொறுப்பான பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம கருத்து தெரிவிக்கையில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் வாழ்க்கையை புனர்வாழ்வு நிகழ்ச்சிகளின் ஊடாக மாற்றியமைக்க முயற்ச்சித்துள்ளோம். பாரிய அளவிலான முதலீடுகள் வடபகுதியிலேயே முதலிடப்பட்டுள்ளன. இம் முதலீட்டாளர்கள் மூலமும் இவர்கள் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வர் எனத் தெரிவித்தார்.

மேலும் கூறுகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ், புதிதாக தெரிவான இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுகாதாரம், போக்குவரத்து, நெடுஞ்சாலை, சூழல், விவசாயம், உட்கட்டமைப்பு, கல்வி, மீன்பிடி மற்றும் ஏனைய பல அபிவிருத்தி நடவடிக்கைகளில் மனித மற்றும் பௌதீக வளங்களை பயன்படுத்தி உச்சபயன் அடையும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, பிராந்தியத்தில் நிலவும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு மக்களின் நலன் மற்றும் பாதுகாப்பபை கருத்தில் கொண்டு சிறந்த முறையிலின் தீர்வு காண உதவுவது எமது பொறுப்பாகும் எனவும் தெரிவிக்கொண்டார்.
vi