இன்டர்நெட் வேகத்தை பொதுமக்களும் அறிந்துகொள்ளலாம்!

Friday, January 14, 2011

நாட்டிலுள்ள இன்டர்நெட் பாவனையாளர்கள் தமது கணினி மூலமே தங்களுக்கு உண்மையில் எந்தளவு வேகத்தில் இன்டர்நெட் சேவை கிடைக்கின்றது என்பதை அறிந்துகொள்ளக் கூடிய
தாக இருக்கும்.

தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழு இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த மாதம் முதல் இந்தத் திட்டம் அமுலுக்கு வரவுள்ளது HSDPA மற்றும் 4G தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இன்டர்நெட் பாவனையாளர்கள் தமக்கு சேவையாளர்கள் வழங்கும் உண்மையான வேகத்தைத் தெரிந்து கொள்ள முடியும்.

அண்மையில் நடத்தப்பட்ட சில பரிசோதனைகள் மூலம் இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்ததன் பிரகாரம் உண்மையான வேகத்தில் சேவைகளை வழங்குவதில்லை என்பது தெரியவந்துள்ளது.