வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர். வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்
தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிகபசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும்.
மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது. வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், இருமல் போன்றவையும் நீங்கும். வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாயுத்தொந்தரவு அதிகமாகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது. வாழைப்பிஞ்சுகளை சாப்பிடலாம் என்றாலும் அது மலத்தை இறுக்கி விடும்.
மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன துண்டுகளாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் நீங்கும். வாழைப் பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால் மலச்சிக்கலால் உண்டான மூலநோய் குறையும். ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுப்படும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும்.
மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தைப் போக்கும். செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கருந்துளுவன் வாழைப்பழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைப்பழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மூளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்' என்னும் ரசாயனப் பொருள், வாழைப்படும் சாப்பிடுவதால் சுரக்கிறது. இதனால் தூக்கம் நன்றாக வரும்.
பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைப்பழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்குப் பின்னர், படிப்படியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Archives
-
▼
2011
(89)
-
▼
January
(20)
- மிடுக்குடன் மீண்டெழுகிறது யாழ். உள்ளூர் பொருளாதாரம்
- ஆறறிவு உடைய மனிதனைக் காட்டிலும் ஐந்து அறிவு உடைய ஜ...
- இரணைமடுக் குளமும் நீர்ப்பாசனமும்
- அதிகாரிகள் மீதான வெறுப்பை இப்படியும் காட்டலாம்!
- ஆண் உறுப்பின் அளவை பெரிதுபடுத்தும் உபகரணம் பலன் எத...
- யோகா பயிற்சிகள் என்கிற பெயரில் பிஞ்சுக் குழந்தைகள்...
- வடக்கில் 30 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுக்...
- 17 அரசியல் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட சங்குப்பிட்டிப...
- வௌ்ளைவானில் ஆள் கடத்தல் என போலித் தகவல்கள்- மன்னார...
- இன்டர்நெட் வேகத்தை பொதுமக்களும் அறிந்துகொள்ளலாம்!
- வாழைப்பழம் சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும்.
- வீடின்றி தெருவில் தவித்துக் கொண்டிருந்த பிச்சைக்கா...
- கார், ஆட்டோ டயருக்கு விடிவு கிடைத்தது: மதுரைக்காரர...
- மூட்டு வலிக்கு முட்டுக்கட்டை
- காங்கேசன்துறை துறைமுகப் பணிகளில் நேரடியாகக் களமிறங...
- ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்ற நாய் : ஜெர்மனியி...
- வளர்ச்சிக்காக சீனா தந்த விலை: 258 நகரங்களில் அமில மழை
- Nokia Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி?
- வைரஸ் கணணிக்கு வராமல் தடுப்பது எப்படி?
- நோக்கியா E5
-
▼
January
(20)